search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை- மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்
    X

    கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை- மாடு மீது மோதி மீண்டும் சேதமடைந்த வந்தே பாரத் ரெயில்

    • விபத்துக்கு பிறகு, அரை-அதிவேக ரெயில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
    • இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும்.

    குஜராத் மாநிலம் காந்திநகர்- மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணியளவில் மாடு மீது மோதியது. அதுல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட இந்த விபத்தில் ரெயிலின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    மேலும் இந்த விபத்து கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறையாகும். இந்த விபத்துக்கு பிறகு, அதிவேக ரெயில் சேவை சுமார் 15 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

    ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே அதிவேக ரெயிலான வந்தே பாரத் நான்கு எருமை மாடுகள் மீது மோதியது. பிறகு இரண்டு நாட்களில் மீண்டும் மற்றொரு மாடு மீது மோதியது.

    இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், "கால்நடைகளுடன் இதுபோன்ற மோதலை தவிர்க்க முடியாது. இருப்பினும், ரயிலை வடிவமைக்கும் போது இது மனதில் வைக்கப்படும்" என்றும் கூறினார்.

    வந்தே பாரத் ரெயிலின் மூன்றாவது சேவையான இந்த ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நிமிடங்களில் இந்த ரெயில் மணிக்கு 160 கிமீ வேகத்தை எட்டும் என்றும் மற்ற ரெயில்களை விட சிறந்த சேவை வசதியைக் கொண்டுள்ளது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

    Next Story
    ×