என் மலர்
இந்தியா

தீபாவளி பட்டாசு வெடித்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபருக்கு அடி-உதை
- சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர்.
- சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் மல்காபுரம் பகுதியில் கடந்த 24-ந் தேதி மற்ற பகுதிகளை போலவே தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியிருந்தது. குடியிருப்பு பகுதியில் வழக்கம்போல மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வந்தனர்.
அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சாய் (வயது 27) சிறுமியை அவரது வீட்டிற்கு தூக்கி சென்றார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
சிறுமி காணாமல் போனதை கண்ட அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிறுமியின் வீட்டிற்கு சென்று பட்டாசு வெடிக்க சிறுமியை அழைத்தனர். ஆனால் சிறுமி வீட்டில் இல்லையே உங்களுடன் தானே விளையாடிக்கொண்டிருந்தார் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர்.
அப்போதுதான் குடும்பத்தினருக்கு சிறுமி காணவில்லை என்பது தெரியவந்தது. அவர்கள் அக்கம் பக்கத்தில் தேட தொடங்கினர்.
சிறுமியை தேடிக்கொண்டிருந்த அவரது பெற்றோர் சாய் வீட்டருகில் வந்துள்ளனர். அப்போது சிறுமியின் அழுகுரல் கேட்டது.
கதவை தட்டிய பெற்றோர் சாய் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டனர். சிறுமி அழுதுகொண்டே இருந்ததால் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது சாய் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது தொடர்பாக சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் வாலிபரை சரமாரியாக தாக்கினர்.
சிறுமியின் பெற்றோர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.