search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்.. பி.ஆர்.எஸ். கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?
    X

    தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்.. பி.ஆர்.எஸ். கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு?

    • பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு.
    • பொது கூட்டங்களில் கலந்து கொள்ள சந்திரசேகர ராவ் திட்டம்.

    தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், பி.ஆர்.எஸ். கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே. சந்திரசேகர ராவ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நாளை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக பிரம்மாண்ட பிரசாரத்தில் ஈடுபட கே. சந்திரசேகர ராவ் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி நாளை (அக்டோபர் 15) துவங்கி மொத்தம் 41 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேர்தல் பிரசாரத்தினை சித்திப்பெட் மாவட்டத்தில் உள்ள ஹூஸ்னாபாத்தில் கே. சந்திரசேகர ராவ் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அக்டபோர் 16 மற்றும் அக்டோபர் 17-ம் தேதிகளில் ஜங்கோன், புவனகிரி மற்றும் சிர்சிலா மற்றும் சித்திப்பெட் பகுதிகளில் நடைபெற இருக்கும் பொது கூட்டங்களில் சந்திரசேகர ராவ் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

    சந்திரசேகர ராவ் நவம்பர் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்காக ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி 105 பேர் அடங்கிய வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×