என் மலர்
இந்தியா
பாகிஸ்தான் மீது ராகுல் காந்திக்கு திடீர் பாசம் ஏன்? ஸ்மிருதி இரானி கேள்வி
- ராகுல் காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.
- காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.
புதுடெல்லி:
அமேதி தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று நடைபெற்ற பேரணியின்போது பேசியதாவது:-
இதுவரை நான் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஆனால் இப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். உங்களால் பாகிஸ்தானையே கவனிக்க முடியவில்லை.
அமேதியை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே என்ன உறவு? இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் மீது பாசம் காட்டுவது ஏன்? ராகுல்காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.
காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. எனது வார்த்தைகள் பாகிஸ்தான் தலைவர்களை சென்றடைகிறது என்றால், எல்லையில் பயங்கரவாதிகளை கொல்ல பயன்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி நிறுவிய அமேதி இது என்பதை நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.