என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணத்திற்கு வர ரூ.70 ஆயிரம் கேட்ட மணப்பெண் தோழி
    X

    திருமணத்திற்கு வர ரூ.70 ஆயிரம் கேட்ட மணப்பெண் தோழி

    • பதிவு இணையத்தில் வைரலாகி திருமண செலவுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    திருமணம் முடிவானதும் மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துமாறு அழைப்பது வழக்கம். அதுபோல் ஒரு மணப்பெண் தனது நீண்ட கால தோழிக்கு தனது திருமணத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்ததோடு, நீதான் மணப்பெண் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதன் பின் ஒருவாரம் ஆன நிலையில் மணப்பெண்ணின் தோழி மணப்பெண்ணுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், நான் மணப்பெண் தோழியாக வருவதற்கு உடை, சிகை அலங்காரம், மணப்பெண்ணுக்கான பரிசு, விருந்துக்கான வைப்புத்தொகை மற்றும் இதர செலவுகளுக்கான கூடுதல் கட்டணம் என சில கட்டண விபரங்களை குறிப்பிட்டு மொத்தமாக ரூ.70 ஆயிரம் அனுப்பினால் திருமணத்தில் பங்கேற்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண் தனது நிதி நிலைமையை விளக்கினார். ஆனாலும் மணப்பெண்ணின் தோழி அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக மணப்பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி திருமண செலவுகள் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×