என் மலர்
இந்தியா
எடை குறைப்புக்கு இளம்பெண் பகிர்ந்த 4 வழிமுறைகள்- வீடியோ வைரல்
- ஒவ்வொரு 10 நாட்களுக்கும் புகைப்படங்களுடன் எடுத்து முன்னேற்றத்தை கண்காணிக்கலாம்.
- பதிவு வைரலாகி வருகிறது.
உடல் பருமன் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் 11 மாதங்களில் 18 கிலோ உடல் எடையை குறைத்த மேடி டிசோ என்ற இளம்பெண் தனது எடை குறைப்பு தொடர்பான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி இருப்பது இணைய பயனர்களை ஈர்த்துள்ளது. பயனர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 4 தலைப்புகளில் அவர் எடை குறைப்பு வழிமுறைகளை பகிர்ந்துள்ளார்.
முதலாவதாக ஒருங்கிணைந்த வலிமை பயிற்சி மற்றும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், இதனால் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவியதாகவும் கூறியிருந்தார். மேலும் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். இது பசியை அடக்கி ஆற்றலை அதிகரிக்க செய்யும். நச்சுக்களை வெளியேற்றும், செரிமானத்தை ஆதரிக்கும் என கூறியிருந்தார்.
இதே போல ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் கூறியிருந்த அவர், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் புகைப்படங்களுடன் எடுத்து முன்னேற்றத்தை கண்காணிக்கலாம் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.