search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மோர் பாக்கெட்டில் புழு... வீடியோ வெளியிட்ட வாடிக்கையாளர் - மன்னிப்பு கேட்ட அமுல் நிறுவனம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மோர் பாக்கெட்டில் புழு... வீடியோ வெளியிட்ட வாடிக்கையாளர் - மன்னிப்பு கேட்ட அமுல் நிறுவனம்

    • அமுல், உங்களின் அதிக புரதச்சத்து நிறைந்த மோர் உடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பியுள்ளீர்கள்.
    • நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் சொல்லவில்லை.

    அமுல் நிறுவன மோர் கப்பில் புழு நெளிந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கஜேந்தர் யாதவ் ஒருவர் பதிவிட்டு அமுல் நிறுவனத்தை விமர்சித்துள்ளார்.

    அந்த பதிவில், "அமுல் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். அமுல், உங்களின் அதிக புரதச்சத்து நிறைந்த மோர் உடன் சேர்த்து எங்களுக்கு புழுவையும் அனுப்பியுள்ளீர்கள். அண்மையில் நான் வாங்கிய மோரில் புழுக்கள் இருப்பதைக் கண்டு எனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தவே இதை எழுதுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    அவரின் அடுத்த எக்ஸ் பதிவில், "நான் அமுல் நிறுவனத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன், அத்துடன் இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இணைத்து, அவர்களின் சோதனைக்காக இன்றுக்குள் சேகரிக்கும்படி கேட்டுக் கொண்டேன். நான் எந்த பொய்யான குற்றச்சாட்டையும் சொல்லவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்தில் உள்ள அமுல் தலைமை அலுவலகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்ததாகவும், நடந்த இந்த சம்பவத்திற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள் என்று கஜேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×