என் மலர்
புதுச்சேரி
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை புதுவை காங்கிரஸ் எதிர்க்கும்- நாராயணசாமி
- மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது.
- புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரியில் மூடியுள்ள ரேசனை திறந்து அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது அரிசி, சர்க்கரை மட்டும் தருவதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறுவது சரியல்ல. ரேசன்கடைகள் திறக்கப்படுமா.? இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது. அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் முதலமைச்சர் சந்தித்து புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை புதுவை காங்கிரஸ் எதிர்க்கும்.
புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார். புதுவை அரசு மீது தொடர்ந்து ஊழல் புகார்களை, குற்றச்சாட்டுகளை கூறிவருகிறேன். இதற்காக என் மீது புதுவை முதலமைச்சர், உள்துறை அமைச்சர் வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
முன்னதாக திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரசார் புதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.