search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரி சட்டசபை மார்ச் 2-வது வாரம் கூடுகிறது: பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு
    X

    புதுச்சேரி சட்டசபை மார்ச் 2-வது வாரம் கூடுகிறது: பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு

    • பட்ஜெட்டில் வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது.
    • கூட்டத்தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை கூட்டம் கடந்த 12-ந்தேதி நடந்தது. கூட்டத்தில் அரசின் 2024-25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட் ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

    மார்ச் மாதம் 2-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியாக உள்ளது.

    2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளதால் அப் போது முழு பட்ஜெட் தாக் கல் செய்ய முடியாது. எனவே தற்போது மார்ச் மாதம் கூட்டத் தொடரில் முழுமையான பட்ஜெட்டை நிதிதுறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது.

    மேலும் இந்த முழு பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட் தயாரிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    எனவே பட்ஜெட்டில் ஏராளமான வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கூட்டத் தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடத்துவது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பார்.

    சட்டசபை நடவடிக்கைகளை காகித பயன்பாடு இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×