என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் 2025: சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி.. நாளை டிக்கெட் விற்பனை
    X

    ஐபிஎல் 2025: சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டி.. நாளை டிக்கெட் விற்பனை

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

    சென்னை:

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அதனை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை அணி வருகிற வெள்ளிக்கிழமை அன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம். 1,700 முதல் 7,500 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×