என் மலர்tooltip icon

    விளையாட்டு

    IPL 2025: 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
    X

    IPL 2025: 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

    • பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பதம் பார்த்தது. லக்னோ அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் (இருவரும் தலா இரு அரைசதம்), டேவிட் மில்லர் நல்ல நிலையில் உள்ளனர். மார்க்ரம், கேப்டன் ரிஷப் பண்ட், ஆயுஷ் பதோனி ஆகியோரின் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன் வரவில்லை. பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான் பலம் சேர்க்கிறார்கள். இந்த சீசனில் தங்களது சொந்த மைதானத்தில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கும் லக்னோ அணி தித்திப்போடு தொடங்க தீவிரம் காட்டும்.

    ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தனது முதலாவது ஆட்டத்தில் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (97 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (47), ஷசாங் சிங் (44) ஆகியோரின் பங்களிப்பால் 243 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, 232 ரன்னில் குஜராத்தை மடக்கியது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ யான்சென், விஜய்குமார் வைஷாக் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்றில் லக்னோவும், ஒன்றில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    Next Story
    ×