என் மலர்
விளையாட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா-லக்னோ ஐ.பி.எல். போட்டி தேதி மாற்றம்?
- மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
- கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இரு அணிகள் மோதும் போட்டி ஏப்ரல் 6-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அன்று ராமநவமி என் தால் தங்களால் போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்திடம் கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் சினேகா சிஸ் கங்குலி கொல்கத்தா போலீசாருடன் 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களால் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இது குறித்து அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் அளித்துவிட்டனர்.
இதனால் கொல்கத்தா-லக்னோ மோதும் போட்டிக்கான தேதி மாற்றப்படுகிறது. கடந்த ஆண்டு ராமநவமியின் போது இதே மாதிரி போட்டி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த சீசனில் கொல்கத்தா-ராஜஸ்தான் மோதும் ஆட்டத்திற்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.