search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு (Sports)

    சென்னையில்  8 அணிகள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் லீக்
    X

    சென்னையில் 8 அணிகள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் 'லீக்'

    • ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.
    • எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    சென்னை:

    இந்தியன் பிரீமியர் டேபிள் டென்னிஸ் லீக் என்று அழைக்கப்படும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

    இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டன. 5-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.யு.டி.) லீக் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 7 வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

    இந்த சீசனில் புதிதாக 2 அணிகள் பங்கேற்கின்றன.இதன் மூலம் முதன்முறையாக 8 அணிகளுடன் டேபிள் டென்னிஸ் லீக் நடத்தப்படுகிறது.

    இதில் கோவா சேலஞ்சர்ஸ், சென்னை லயன்ஸ் , தபாங் டெல்லி, யு மும்பா , புனேரி பல்தான், பெங்களூரு ஸ்மாஷர்ஸ் மற்றும் இரண்டு புதிய அணிகளான அகமதாபாத் எஸ்.ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

    ஒவ்வொரு அணியும் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 வீரர்களை கொண்டிருக்கும்.

    8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் 5 ஆட்டங்களில் விளையாடும். ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோத வேண்டும். மேலும் எதிர் பிரிவில் உள்ள 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இந்த 2 அணிகளும் குலுக்கல் முறையில் தீர்மானிக்கப்படும்.

    Next Story
    ×