என் மலர்
தமிழ்நாடு
நிசான் கார் தொழிற்சாலை ரூ.5,300 கோடியில் விரிவாக்கம்- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு அதிகாரிகளும், நிசான் கார் கம்பெனி அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- 108 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி செய்யும் நிசான் கார் தொழிற்சாலையில் மின்சார கார்களும் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிசான் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கார் தொழிற்சாலையில் இதுவரை 2.50 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
இப்போது இந்த தொழிற்சாலையை ரூ.5,300 கோடி மதிப்பில் 600 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில இன்று காலை நடைபெற்றது.
சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசு அதிகாரிகளும், நிசான் கார் கம்பெனி அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
108 நாடுகளுக்கு கார் ஏற்றுமதி செய்யும் நிசான் கார் தொழிற்சாலையில் மின்சார கார்களும் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.