search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வைகை அணையில் மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு- 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
    X

    வைகை அணையில் அமைச்சர் பெரியகருப்பன் தண்ணீரை திறந்து வைத்தார். அருகில் கலெக்டர்கள் முரளிதரன்(தேனி), அனீஸ்சேகர்(மதுரை), மதுசூதனரெட்டி (சிவகங்கை) மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    வைகை அணையில் மீண்டும் கூடுதல் தண்ணீர் திறப்பு- 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது.

    ஆண்டிபட்டி:

    பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனைதொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டபோதும் அணையின் நீர்மட்டம் 70 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரை நிலைநிறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நீர்மட்டமும் உயர்ந்து 70.60 அடிவரை நீர்தேக்கப்பட்டது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பாசன பகுதியில் உள்ள ஒரு போக பாசனநிலங்களுக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனநிலங்களுக்கும் விநாடிக்கு 1130 கனஅடிநீர், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று காலை திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதில் கலெக்டர்கள் முரளிதரன்(தேனி), அனீஸ்சேகர்(மதுரை), மதுசூதனரெட்டி (சிவகங்கை) மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அணைக்கு 2816 கனஅடிநீர் வருகிறது.

    இதனால் மதுரை உள்பட 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. 2242 கனஅடிநீர் வருகிறது. 1867 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, அணைக்கு வரும் 659 கனஅடிநீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 176 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் குடிநீருக்காகவும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறு 12.2, தேக்கடி 7.6, சோத்துப்பாறை 6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×