என் மலர்
தமிழ்நாடு
சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?
- சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.
- தொடர்ந்து மழை பெய்வதால் மழை நீர் வடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை பாதிப்பு குறித்து பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் ராமன் கூறியதாவது:-
புயல் சின்னம் கடலோர மாவட்டங்கள் அருகே நெருங்கி செல்வதால் கனமழை நீடித்து வருகிறது. அடையாறு கூவம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் அனைத்து கால்வாய்களிலும் மழைநீர் அதிகம் செல்கிறது.
கடல் நீர் எதிர்த்து வருவதால் ஆறு-கால்வாய் தண்ணீர் மெதுவாகத்தான் கடலுக்குள் செல்கிறது. எனவே பொது மக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். இதுவரை 153 முகாம்களில் 6,200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருங்குடியில் அதிக பட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மீட்பு நிவாரண பணிகளுக்கு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மழை தொடர்ந்து பெய்வதால் அனைத்து ரோடுகளிலும் மழைநீர் மெதுவாகதான் வடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.