என் மலர்
தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன்
அம்பேத்கர் படத்தை அவமதித்த விவகாரம்- திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

- அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை:
சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.