என் மலர்
தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- துர்காவதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்
- 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
- திருமண ஜோடிகள் சார்பில் பங்கேற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய மனிதநேய திருநாள் என்ற தலைப்பில் 40 நாட்களில் 70 நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
அதில் ஒரு நிகழ்ச்சியாக 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. முதல்வரின் துணைவியார் துர்காவதி ஸ்டாலின் விழாவில் பங்கேற்று 70 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். முதலில் மாற்று திறனாளிகள் ஜோடிகளுக்கு முதல்வரின் துணைவியார் தங்கத்தாலியை எடுத்துக்கொடுக்க அமைச்சர்கள் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் மற்ற ஜோடிகளுக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
அனைத்து ஜோடிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. அனைத்து ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்கத்தாலி , கட்டில் மெத்தை, பீரோ, மிக்சி, கிரைண்டர் உட்பட வீட்டிற்கு தேவையான 36 வகையான சீர்வரிசை என ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. திருமண ஜோடிகள் சார்பில் பங்கேற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருமண விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்ரமணியன், மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ.ரவிச்சந்திரன், பேராசிரியர் எழிலரசி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.