search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலவச மருத்துவ காப்பீட்டு வழங்குவதாக பொதுமக்களிடம் பணம் வசூல்- ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை
    X

    இலவச மருத்துவ காப்பீட்டு வழங்குவதாக பொதுமக்களிடம் பணம் வசூல்- ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

    • பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வாழப்பாடி:

    மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஊழல் நடந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியதால் இத்திட்ட பயனாளிகளின் (கே.ஓய்.சி) ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்க்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவன ஊழியர்கள் இணைய வசதி கொண்ட செல்போன், மடிக்கணினியுடன் சென்று பொதுமக்களிடம் ஆதார் ஓ.டி.பி அல்லது கைரேகை வைத்து கே.ஒய்.சி ஆவணங்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் வாழப்பாடி பகுதியில் கடந்த இரு நாட்களாக முகாமிட்டு கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என கூறி மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதாக, ஒரு நபருக்கு ரூ. 30 வீதம் பணமும், ஆதார், குடும்ப அட்டை நகல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றையும் வசூலித்து உள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், வாழப்பாடி போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்திய தனியார் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் பணம் மற்றும் ஆவணங்கள் வங்கியது உண்மை என தெரியவந்ததால், தனியார் நிறுவன ஊழியர்களை எச்சரித்த அதிகாரிகள், பணத்தையும், ஆவணங்களையும் பொதுமக்களிடமே திருப்பி கொடுக்க உத்தரவிட்டனர். வாழப்பாடி பகுதியில் மட்டும் 3ஆயிரம் பேரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×