என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/01/1770415-bhavan.jpg)
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்.
- தமிழகத்தில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் உள்பட 710 பேருக்கு வாக்குரிமை உள்ளது.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் நேற்றுடன் முடிந்தது.
அசோக் கெலாட், திக்விஜய்சிங் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பம் ஏற்பட்டது. கடைசியில் அதிகாரபூர்வ வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவை முடிவு செய்தனர். அவர் நேற்று மனுதாக்கல் செய்தார்.
மேலும் சசிதரூர், கே.என்.திரிபாதி ஆகியோரும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்கள். போட்டி ஏற்பட்டால் கண்டிப்பாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
இப்போது 3 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தாலும் வருகிற 4-ந்தேதி வரை மனுவை வாபஸ் பெற அவகாசம் இருக்கிறது.
மேலிடத்தில் சமாதான உடன்பாடு ஏற்பட்டு 2 பேர் வாபஸ் வாங்கி விட்டால் தேர்தல் தவிர்க்கப்படும். இல்லாவிட்டால் தேர்தல் நடத்தப்படும்.
போட்டியிருந்தால் வருகிற 17-ந்தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு 5-ந்தேதி வெளியாகும்.
வாக்குப்பதிவு நடைபெற்றால் தமிழகத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் உள்பட 710 பேருக்கு வாக்குரிமை உள்ளது. அவர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள்.