என் மலர்
தமிழ்நாடு
ஓட்டப்பிடாரம் அருகே தி.மு.க. பிரமுகரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது
- மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் தி.மு.க. கிளை செயலாளர் மாரீஸ்குமார். (வயது 30).
இவர் கடந்த 27-ந் தேதி மோட்டார் சைக்களில் சென்றபோது ஓட்டப்பிடாரம் அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் காயம் அடைந்த மாரீஸ்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டது தொடர்பாக அவருக்கும், ஓட்டப்பிடாரம் தி.மு.க.சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளரான கண்ணன் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மணல்குண்டுவை சேர்ந்த வெயிலுகந்தகோபால் ஆகிய இருவரும் சேர்ந்து மாரீஸ் குமாரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கண்ணன் மற்றும் வெயிலுகந்தகோபால் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.