என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![இரட்டை ரெயில் தண்டவாள பணி நிறைவு- 23 ரெயில்கள் பயண நேரம் மாற்றம் இரட்டை ரெயில் தண்டவாள பணி நிறைவு- 23 ரெயில்கள் பயண நேரம் மாற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/29/1737497-train.jpg)
இரட்டை ரெயில் தண்டவாள பணி நிறைவு- 23 ரெயில்கள் பயண நேரம் மாற்றம்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- இரட்டை பாதை, புதிய பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
- இருவழிப்பாதையாக மாற்றப்படுவதால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 10 மணி நேரத்தில் பயணிக்கலாம்.
சென்னை:
இரட்டை ரெயில் தண்டவாள பணி நிறைவையொட்டி கன்னியாகுமரி-சென்னை உள்பட 23 ரெயில்களின் பயண நேரம் விரைவில் மாற்றப்படுகிறது. இதனால் 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் குறைகிறது.
கன்னியாகுமரி-நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரெயில் பாதையும் நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே மற்றொரு இரட்டை ரெயில் பாதையும் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது.
மேலும் கன்னியாகுமரி முதல் மதுரை வரை உள்ள பாதை இருவழிப்பாதையாக மாற்றப்படுவதால் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 10 மணி நேரத்தில் பயணிக்கலாம்.
தெற்கு ரெயில்வேயில், 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை பயண நேரம் குறைக்கும் வகையில், 23 ரெயில்கள் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தெற்கு ரெயில்வே சார்பில் நடந்து வரும் இரட்டை பாதை, புதிய பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து வருகின்றன். இதனால் ரெயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி-சென்னை எழும்பூர், புதுடில்லி-திருவனந்தபுரம், மதுரை-திருவனந்தபுரம், சென்ட்ரல்-திருவனந்தபுரம் உள்ளிட்ட 23 விரைவு ரெயில்களின் நேரம், அடுத்த வாரம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது.
இதனால் 5 நிமிடம் முதல் 4 மணி நேரம் வரை ரெயில் பயண நேரம் குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.