என் மலர்
தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
- ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, வீரசோழபுரம், மாடூர் உள்ளிட்ட கிராமங்களை சேரந்தவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும். இதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கண்டித்தும், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டதிற்கு வந்திருந்தவர்கள் மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு வரவேற்புரையாற்றினார். இதில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி. காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் நகர செயலாளர் பாபு, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை கழக நிர்வாகிகள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.