என் மலர்
தமிழ்நாடு
பார்முலா 4 கார் பந்தயம்- புதிய அட்டவணை வெளியீடு
- சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்வு.
- இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்முலா 4 கார் பந்தயம் மழையின் காரணமாக எஃப்ஐஏ சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை ஐகோர்ட் அளித்திருந்த அவகாசம் நிறைவடைந்த நிலையில், எஃப்ஐஏ சான்றிதழ் வழங்காததால் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இரவு 8 மணிக்குள் சான்று பெற வேண்டும் இல்லையெனில் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கூறியது.
இந்நிலையில், சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் ஆய்விற்கு பிறகு தரச்சான்றிதழ் வழங்கியது.
எப்ஐஏவிடம் இருந்து தற்காலிக சான்று பெறப்பட்டதன் அடிப்படையில், போட்டிக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் தகுதி சுற்று ஆட்டங்களுடன் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்நாள் நிகழ்வுகள் இரவு 11 மணிக்கு நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.