என் மலர்
தமிழ்நாடு

மேற்கு மாம்பலத்தில் என்ஜினீயர் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை

- சூரிய நாராயணன் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
- சூரியநாராயணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.
போரூர்:
சென்னை, மேற்கு மாம்பலம் மூர்த்தி தெரு விரிவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சூரிய நாராயணன். என்ஜினீயரான இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் சூரிய நாராயணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவரது வீட்டு வந்த வேலைக்கார பெண் விஜயா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சூர்யநாராயணனுக்கும், அசோக்நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சூரிய நாராயணன் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
சூரியநாராயணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.