search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை ஆம்னி பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 11 பேர்
    X

    சென்னை ஆம்னி பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 11 பேர்

    • அதிகாலை 1 மணி அளவில் பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது.
    • தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து நேற்று இரவு திருநெல்வேலிக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் சென்னையில் இருந்து பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    அதிகாலை 1 மணி அளவில் இந்த பஸ் திண்டிவனம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தது. அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் குடித்துவிட்டு பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தனர். தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் 2 பேர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்தப் பெண் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கவே அவரது உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் பஸ் நிற்காமல் செல்லவே ஆத்திரமடைந்த உறவினர்கள் சினிமா பட பாணியில் பஸ்சை இரு சக்கர வாகனம் மூலம் 8 கிலோமீட்டர் துரத்தி விழுப்புரம் அடுத்த பிடாகம் என்ற இடத்தில் மடக்கினர். அதில் இருந்த 11 பேர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பஸ் மற்றும் அதிலிருந்த அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 பேரை மட்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற பயணிகளையும் பஸ்சையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×