என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சுட்டெரிக்கும் வெப்ப அலை தாக்கம்: தமிழகத்தில் ஏ.சி. விற்பனை 3 மடங்கு உயர்வு
- ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
- சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் அதிகரித்தது.
108 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. மேலும் வட மாவட்டங்களில் வெப்ப அலை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இரவில் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்குள் தூங்க முடியவில்லை. வீட்டிற்கு வெளியே காற்று இல்லாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஏ.சி. பயன்பாடு அதிகரித்துள்ளது.
பெரும்பாலான குடும்பங்களில் புதிதாக ஏ.சி. வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். கடன் வசதி இருப்பதால் முன் தொகையை செலுத்தி ஏ.சி. வாங்குகின்றனர்.
ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் தற்போது ஏ.சி. வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வெயிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் இரவில் தூக்கம் இல்லாமல் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் ஏ.சி. வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்கின்றனர்.
சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்கள், கிராமங்கள் நகரப்பகுதியிலும் ஏ.சி. விற்பனை 'களை' கட்டி உள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு வித சலுகைகளை கூறி ஏ.சி. விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் வீட்டு உபயோக
கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஜவுளி வாங்கும் கூட்டம் போல தற்போது ஏ.சி. வாங்குவதற்கு கடைகளில் குவிகின்றனர்.
சென்னையில் புறநகர் பகுதிகளில் ஏ.சி. விற்பனை அமோகமாக நடக்கிறது. வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கக்கூடும் என்பதால் அதனை சமாளிக்க ஏ.சி. வாங்குவதில் தீவிரம் காட்டுகின்றனர்.
ஏ.சி. விற்பனை கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏ.சி.யை வாங்கினாலும் அதனை வீடுகளில் வந்து பொறுத்துவதற்கு காலதாமதம் ஆகிறது.