search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக சரிவு
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக சரிவு

    • நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.
    • மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    பென்னாகரம்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது.

    நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவி மற்றும் காவிரி ஆற்றில் உற்சாகமாக குளித்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    Next Story
    ×