search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால்... மின்வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
    X

    மின் வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழந்தால்... மின்வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

    • மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    • மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும்.

    ஓசூர், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.

    அப்போது, மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும் எனவும் அது சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.

    இதனையடுத்து, "மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும்" என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

    Next Story
    ×