என் மலர்
தமிழ்நாடு

X
ஸ்டேட் வங்கியின் கடன் வட்டி அதிகரிப்பு
By
Suresh K Jangir15 Feb 2023 1:10 PM IST

- குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி சமீபத்தில் உயர்த்தியது.
இதையடுத்து ஸ்டேட் வங்கி அனைத்து வகை கடன்களுக்கான வட்டியை 0.1 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகன கடன் என பல்வேறு வகை கடன்களுக்கான வட்டி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவீதத்தில் இருந்து 7.95 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Next Story
×
X