என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பிரசார ஆடியோ ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பிரசார ஆடியோ](https://media.maalaimalar.com/h-upload/2024/02/24/2011667-jayalalithaa.webp)
X
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஜெயலலிதா பிரசார ஆடியோ
By
Maalaimalar24 Feb 2024 1:49 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது.
- தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் கூடிய ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசுவது போன்ற இடம்பெற்றுள்ள வாசகங்கள் வருமாறு:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளான தாலிக்கு தங்கம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய சாதனைகளுக்காகவே தமிழக மக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்தார்கள். மத்தியில் ஆளும் அரசும் மாநிலத்தில் ஆளும் அரசும் தமிழக நலனுக்கு எதிராக உள்ளனர். எனவே தமிழகத்தில் உரிமையை மீட்டெடுத்து தமிழ்நாட்டை காப்பதற்காக சகோதரர் எடப்பாடி பழனிசாமி கரத்தை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். மக்களாலே நாம் மக்களுக்காகவே நாம்.
இவ்வாறு ஜெயலலிதா பேசியது போன்று ஆடியோ வெளியிடப்பட்டது.
Next Story
×
X