search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்கள் நீதி மய்யம்  சார்பில் மருத்துவ முகாம் விரைவில் தொடங்கப்படும்: கமல்ஹாசன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம் விரைவில் தொடங்கப்படும்: கமல்ஹாசன்

    • சென்னையில் யாரும் எதிர்பாராத வகையில் பெருமழை பெய்துள்ளது.
    • இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இப்போது வந்தது பேரிடர்.

    சென்னை:

    சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் யாரும் எதிர்பாராத வகையில் பெருமழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் 56 செ.மீ. அளவுக்கு மழை பெய்து உள்ளது. இதுபோன்ற இயற்கை பேரிடர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இப்படிப்பட்ட நேரங்களில் நமது தேவைகளையும், தேவையான முன்னேற்பாடுகளையும் நாமே செய்து கொள்ள வேண்டும்.

    அரசை குறை கூறுவதை விட்டுவிட்டு, களத்தில் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர், இப்போது வந்தது பேரிடர்

    அரசை அப்புறமாக விமர்சிக்கலாம். இதுபோன்ற பாதிப்பு இனி ஏற்படாது என்று யாராலும், எந்த அரசியல்வாதியாலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் செய்ய வேண்டியதை மேற்கொள்ள வேண்டும்.

    வேளச்சேரியில் பெரிய சமையல் கூடத்தை நிறுவி அதன் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக 5,000 பேருக்கான நிவாரண உதவிகளை மக்கள் நீதி மய்யம் செய்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் மவுரியா, பொதுச்செயலாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், முரளி அப்பாஸ், கவிஞர் சினேகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×