என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட் மறுப்பு
    X

    தலைமை ஆசிரியர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட் மறுப்பு

    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல்(வயது57). இவர் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி டெய்சி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது அரசு கூடுதல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 30 சாட்சிகளில் 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தலைமை ஆசிரியர் 7.5.2022-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். ஆனால் 5 நாட்களில் புத்தகத்தை சிறையில் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டதற்காக சம்பந்தப்பட்ட வரும் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே குண்டர் சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×