search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா பிறந்தநாளை திறந்த வெளிமாநாடாக நடத்த முடிவு- ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    அண்ணா பிறந்தநாளை திறந்த வெளிமாநாடாக நடத்த முடிவு- ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்

    • ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சென்னை:

    ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது. அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் வைகோ, மாநில நிர்வாகிகள் செந்தில் அதிபன், மல்லை சத்யா, ஏ.கே.மணி, முருகன், ராஜேந்திரன் டாக்டர் ரொகையா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரையில் திறந்தவெளி மாநாடு நடத்துவது கவர்னருக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை விரைவுபடுத்துவது, தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுபடுத்தி கர்நாடகா மேகதாது அணைகட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்க செய்ய மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் நெக்ஸ்ட் தேர்வு முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×