search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசுக்களை ஒழிக்க மேலும் 6 டிரோன் எந்திரங்கள்- அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
    X

    கொசுக்களை ஒழிக்க மேலும் 6 டிரோன் எந்திரங்கள்- அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

    • பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
    • பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப் புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெருநிறுவன சமுக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 டிரோன் எந்திரங்களும் வழங்கப்பட்டன.

    அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.

    மக்கும், மக்காத குப்பைகளைப் பெறுவதற்கான புதிய குப்பைத் தொட்டிகள், பயன்பாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

    அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், இளைய அருணா, டாக்டர் கோ.சாந்த குமாரி, சர்ப ஜெயாதாஸ் நரேந்திரன், நியமனக்குழு உறுப்பினர் வேலு, துணை ஆணையாளர்கள் பிரசாந்த், ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவர் ஶ்ரீராமுலு, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், உர்பேசர் சுமீத் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×