என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு- மதன் மோகன் ஏற்பாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு- மதன் மோகன் ஏற்பாடு](https://media.maalaimalar.com/h-upload/2023/11/23/1985916-madhanmohan.webp)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு- மதன் மோகன் ஏற்பாடு
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாதம் முழுவதும் சேப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துதல், தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
சென்னை:
சேப்பாக்கம் பகுதி தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான மதன் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மாதம் முழுவதும் சேப்பாக்கம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. சேப்பாக்கம் பகுதி சார்பில் பிறந்தநாளன்று கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ரத்த தான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்துதல், தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் சேப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது என்பதை வட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மு.க.தமிழரசு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.