என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/25/1971539-udhayanidhistalin.webp)
லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.
- முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
கம்பம்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.
தேக்கடியில் இருந்து கூடலூர் வழியாக இன்று காலை லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மணிமண்டபத்தையும் சுற்றி பார்த்தார்.
அதனை தொடர்ந்து கார் மூலம் கம்பம் நடராஜன் திருமண மண்டபத்திற்கு வருகை தந்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கம்பத்தில் தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கிழி வழங்கினார்.
இதனை தொடர்ந்து கம்பம் பாவலர் படிப்பகம் அருகே மாணவர்களுக்கான கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து வீரபாண்டியில் போடேந்திரபுரம் விளக்கு பகுதியில் உள்ள மைதானத்தில் தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்பு முத்துதேவன்பட்டியில் உள்ள வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இன்று பிற்பகலில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய அங்காடியை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து தேனி என்.ஆர்.டி. நகரில் நூலகத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேனி மாவட்டத்தில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் அன்பில் மகேசும் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.