என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
ஓணம் பண்டிகை- தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை
BySuresh K Jangir6 Sept 2022 9:56 AM IST (Updated: 6 Sept 2022 11:27 AM IST)
- குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணப்பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும், கேரள எல்லையை யொட்டி உள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்படும். அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் ஓணப்பண்டிகை களைகட்டும். இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுபோல கோவை, நீலகிரி, கோவை, திருப்பூர், சென்னை மாவட்டங்களுக்கும் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாள மொழி பேசும் மக்கள் அதிக அளவில் இருப்பதால் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கூடுதலாக ஈரோ டு, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் ஓணப்பண்டிகைக்காக உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 9 மாவட்டங்களுக்கு ஓணப்பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X