என் மலர்
தமிழ்நாடு

தென்சென்னை, வடசென்னை தொகுதி நிர்வாகிகளுடன் தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை
- அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது.
- மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் தென்சென்னை, வடசென்னை தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
நிர்வாகிகளுடன் 9-வது நாளாக தி.மு.க. ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. தென்சென்னை, வடசென்னை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
மத்திய சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது.
தொகுதியில் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
Next Story