search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
    X

    பாவூர்சத்திரம் சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்.

    பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

    • ஆடுகளின் விற்பனையானது ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.
    • பாவூர்சத்திரம் ஆடுகள் விற்பனை சந்தையில் இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தென்காசி:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் ஆட்டுச்சந்தையில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

    பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஆடுகளை வாங்குவதற்காக ராஜபாளையம், தென்காசி, பொட்டல்புதூர், வீராணம், மேலப்பாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பத்தமடை, கேரளாவின் தென்மலைப் பகுதிகள் உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிக அளவில் ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள் குவிந்திருந்தனர்.

    ஆடுகளின் விற்பனையானது ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது. மேலும் மாடுகளின் விற்பனையும் அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக காங்கேயம், ஓசூர் ஓட்டேரி, கிர் இன காளைகள், நாட்டு ரக காளைகள், எருமைகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. பாவூர்சத்திரம் ஆடுகள் விற்பனை சந்தையில் இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×