என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவர் கைது
    X

    வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவர் கைது

    • மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    மாணவிக்கு அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

    மழை காரணமாக கடந்த 6-ந் தேதி வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று மாணவியின் தாய் மற்றும் தந்தை வேலைக்கு சென்று விட்டனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இதையறிந்த மாணவர், மாணவியின் வீட்டிற்கு சென்றார். தனியாக இருந்த மாணவியிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசைவார்த்தை கூறினார். பின்னர் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மாலையில் மாணவியின் தந்தை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். மாணவியின் தந்தை வருவதை பார்த்த மாணவர் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பிச் சென்றார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். மகளை பார்த்தபோது அவர் பதட்டமாக இருந்தார்.

    மாணவியின் தந்தை அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு மாணவி தன்னுடன் படிக்கும் மாணவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அழுதார்.

    இதுகுறித்து மாணவியின் தந்தை வால்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவரை கைது செய்தனர்.

    Next Story
    ×