என் மலர்
தமிழ்நாடு

4-வது நாளாக திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது.
- திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.
திருவள்ளூர்:
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிகழ்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் பலத்த மழை கொட்டியது. இன்று 4-வது நாளாக அதிகாலை கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக அதிகளவு மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பூண்டி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 33 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-8
பள்ளிப்பட்டு-28
ஆர்.கே.பேட்டை-19
சோழவரம்-5
பொன்னேரி-4
செங்குன்றம்-18
ஜமீன்கொரட்டூர்-3
பூந்தமல்லி-2
திருவாலங்காடு-16
பூண்டி-31
தாமரைப்பாக்கம்-7
திருவள்ளூர்-10
ஊத்துக்கோட்டை-24
ஆவடி-23.