என் மலர்
தமிழ்நாடு
X
சேலத்தில் இருந்து மும்பை, திருப்பதி, திருச்சிக்கு விரைவில் விமான சேவை
ByMaalaimalar8 May 2024 10:13 AM IST (Updated: 8 May 2024 10:13 AM IST)
- விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார்.
சேலம்:
சேலம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத், கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர், இண்டிகோ விமான சேவை தற்போது தினமும் நடைபெறுகிறது.
இதில் உதான் அல்லாத திட்டத்தில் இண்டிகோ நிறுவனம், சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ஏர்சபா விமான நிறுவனம் மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவையை இயக்க விமான போக்குவரத்து ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளது. இந்த விமானங்கள் வரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து விமான நிலைய இயக்குனர் விஜய் உபாத்யாயா கூறுகையில், சேலத்தில் இருந்து ஏர்சபா நிறுவனம் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளன. ஜூலை மாதம் முதல் இந்த விமான இயக்கம் தொடங்கும் என கூறினார் .
Next Story
×
X