search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு
    X

    ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.
    • அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.

    சென்னை:

    பா.ஜனதா நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற சிறப்பான செயல் முறை நடைமுறைப் படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்கிறேன்.

    இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும், இந்தக் குழுவின் பரிந்துரைகள் இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மன்றங்களில் விவாதிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

    ஒவ்வொரு ஐந்தாறு மாத இடைவெளிகளில் ஏதாவது தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதால், தேர்தல் விதிமுறைகள் காரணமாக மத்திய அரசின் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைய கால தாமதம் ஏற்படுகிறது என்பது முக்கிய காரணம்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்கள் நலன், நாட்டு நலன் என அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் செயல்முறை என்ற அடிப்படையில், போலி தகவல்களை நம்பாமல் மக்கள் சுயமாக சிந்தித்து தங்கள் கருத்துகளை கருத்து கேட்பின் போது பதிவு செய்து, கட்சிப்பாகு பாடின்றி மக்கள் இந்த தேர்தல் செயல்முறையை வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×