என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை போடுவதா?- அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சீமான் கண்டனம்
    X

    சீமான்

    ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை போடுவதா?- அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சீமான் கண்டனம்

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிவார்ந்த தலைவர் என்று நினைத்தேன்.
    • ரூபாய் நோட்டில் காந்தி படம் இருப்பதே வருத்தம்தான்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு அறிவார்ந்த தலைவர் என்று நினைத்தேன். ஆனால், ரூபாய் நோட்டில் காந்தி படத்திற்கு பதிலாக லட்சுமி படத்தைப் போட வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை நான் ஏற்கவில்லை. முதலில் ரூபாய் நோட்டில் காந்தி படம் இருப்பதே வருத்தம்தான்.

    காரணம், ஊழல், லஞ்சத்திற்கு எதிராக இருந்த காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது. மதுவிற்கு எதிராக இருந்த காந்தி சிரித்துக்கொண்டிருக்கும் படம் போட்ட நோட்டு தான் மது வாங்குவதற்கும் கொடுக்கப்படுகிறது. விபசார விடுதிகளில் அதே காந்தியின் படம் போட்ட ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது. கொலை செய்பவனுக்கும் காந்தி முகம் பதித்த ரூபாய் நோட்டு தான் கொடுக்கப்படுகிறது.

    அந்த ரூபாய் நோட்டில் நீங்கள் சாமியாக வணங்குகிற லட்சுமி படம் போட்டால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். கொலை செய்பவனிடம், மது விற்பனையாளரிடம், ஊழல் செய்பவனிடமும், லஞ்சம் வாங்குபவனிடமும் லட்சுமி தெய்வம் துணை செல்ல விடுவதா? இந்த சிந்தனையே பெரும் மடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×