என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்னை மன்னிச்சிடுங்க மோடி ஜி.. உங்களை தலைகுனிய வைச்சிட்டேன்- பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்
    X

    "என்னை மன்னிச்சிடுங்க மோடி ஜி.. உங்களை தலைகுனிய வைச்சிட்டேன்"- பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம்

    • பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 3,32,908 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் 1,40,537 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில உள்ளார். இந்த தொகுதியில் கிட்டத்தட்ட திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில் இந்த தோல்வி தொடர்பாக பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

    "என்னை மன்னிச்சிடுங்க மோடி ஜி. உங்களை தலைகுனிய வைச்சிட்டேன். தொடர்ந்து போராடி உங்களின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வேன். மாற்றம் வெகு தொலைவில் இல்லை. திமுகவுக்கு எதிராக கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளோம் மத்திய சென்னையின் ஒவ்வொரு பாஜக காரியகர்த்தாவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஜெய் பாஜக" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×