என் மலர்
தமிழ்நாடு
சனாதனம் பற்றி பேச்சு: மக்களை திசை திருப்ப உதயநிதி முயற்சி செய்து வருகிறார்- ஜெயக்குமார்
- மக்களை ஏமாற்ற வேண்டும் திசை திருப்ப வேண்டும்.
- ஊழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது.
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சனாதனம் குறித்து உதயநிதி கூறிய கருத்திற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனத்தை தெரிவிக்கிற வகையில் கருத்தைத் தெரிவித்து இருந்தார். பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சத்யராஜ் ஒரு படத்தில் ரெண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சினை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில் ஒரு திட்டமிட்டு நாட்டில் உள்ள பிரச்சினைகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் பல இடங்களில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு போக்குவரத்து நெரிசல் ஆக்கிவிட்டு இந்த அளவிற்கு தமிழ்நாடு கொலை மாநிலமாக கொள்ளை மாநிலமாக இருக்கிறது.
வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. சட்டம்-ஒழுங்கு சந்திசிரிக்கின்ற வகையில் ஒரு நாடு சீர்கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது.
ஒரு பக்கம் விலைவாசி உயர்வு ஒரு பக்கம் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம் வீட்டு வரி சொத்து வரி பால் விலை உயர்வு விலை வாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களை ஏமாற்ற வேண்டும் திசை திருப்ப வேண்டும்.
ஊழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது. 1947-ல் சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி எல்லோருக்கும் எல்லா உரிமையும் வழங்கப்பட்டு எல்லா ஆட்சிகளிலும் மக்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது.
ஆனால் தி.மு.க. ஆட்சியில் இது கிடையாது. அடிப்படை வசதிகளிலிருந்து மக்களுடைய சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கி ஆதிதிராவிடருக்கு உரிய அந்தஸ்தை வழங்கிய கட்சி அ.தி.மு.க.
சமதர்மம் பேசும் இவர் இந்திய கூட்டணியில் திருமாவளவனை கண் வெனியராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை அப்போ சமதர்மம் எங்கு போனது. உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை. அவரது மகனுக்கு முழுவதுமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மதத்தை இழிவு படுத்தலாமா?
மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் உதயநிதி செய்து வருகிறார். 2024-ல் இது அனைத்தும் பிரதிபலிக்கும். இந்த ஆட்சிக்கு எதிரான அ.தி.மு.க.வின் அலை பெரிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.