search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு- கொளத்தூர் த.ரவி அறிவிப்பு
    X

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில மாநாடு- கொளத்தூர் த.ரவி அறிவிப்பு

    • மே. 5- ந்தேதி “வணிக உரிமை மீட்பு மாநாடு” சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
    • மாநாடு தமிழக ஒட்டுமொத்த வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும்.

    சென்னை:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் த.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5வது மாநில மாநாடு, 40-வது வணிகர் தினவிழா மே. 5- ந்தேதி "வணிக உரிமை மீட்பு மாநாடு" சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நீதியரசர்கள், தொழில் அதிபர்கள், பல்வேறு ஒருங்கிணைந்த அனைத்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு தமிழக ஒட்டுமொத்த வணிகர்களின் திருப்புமுனை மாநாடாக அமையும். இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் வணிகர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறி உள்ளார்.

    Next Story
    ×