என் மலர்
தமிழ்நாடு
யார் பெரியவர்?- பா.ஜனதாவுக்குள் ஒரு விசித்திரமான போட்டி
- தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூட்டணி தேவையில்லை என்று கொளுத்தி போட்டது டெல்லி வரை பற்றிக்கொண்டது.
- அண்ணாமலை 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று ஒரு தகவலை தெரிவித்தார்.
பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் வெளி உலகுக்கு கூட்டாளிகள் என்று சொன்னாலும், அவ்வப்போது இருவரும் பகையாளிகள் போல் மோதிக்கொள்வதும் நடக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூட்டணி தேவையில்லை என்று கொளுத்தி போட்டது டெல்லி வரை பற்றிக்கொண்டது. கடைசியில் அ.தி.மு.க. கூட்டணி தொடருகிறது என்று அமித்ஷா பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது என்று அறிவித்ததோடு பிரச்சினை முடிந்தது.
இந்தநிலையில் மீண்டும் ஒரு போட்டி எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் பேட்டி அளிக்கும் போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி பலமாக இருக்கிறது என்று கூறி விட்டு 9 தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும், அதில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருவதாகவும் கூறினார்.
அந்த 9 தொகுதிகள் எவை? அப்படியானால் கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில் அதே தினத்தில் மாலையில் பேட்டி அளித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது தான் இந்த கட்சிக்கு தலைவராகி சாதித்தது என்ன என்பதை காட்ட வேண்டும். அதில் பின்னடைவு ஏற்பட்டாலும் கவலைப்பட போவதில்லை என்று குறிப்பிட்டார்.
இதைப்பார்த்ததும் சிவன் (அண்ணாமலை) பெரியவரா? அல்லது முருகன் (சிவனின் மகன்) பெரியவரா? யார் ஜெயிப்பார்கள் என்று கட்சியினர் பேசிக் கொண்டனர்.