என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/12/1834964-gov.webp)
X
அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
By
Suresh K Jangir12 Feb 2023 1:12 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன்.
- பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் "மோடி @ 20 நனவாகும் கனவுகள்", "அம்பேத்கர் மற்றும் மோடி-சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்" ஆகிய 2 புத்தகங்களை கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.
புத்தகங்களை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர் ஒரு தேசியவாதி. இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது.
பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர். ஆனால் சமூக நீதி குறித்து அதிகம் பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
X